Staff selection commission-ஸ்டெனோ பணியிடம்
மத்திய அரசு பல்வேறு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் பணியை எஸ்.எஸ்.சி., செய்து வருகிறது. தற்போது ஸ்டெனோகிராபர் (கிரேடு சி மற்றும் டி) பணியிடங்களுக்கான எழுத்துத்தேர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எத்தனை பணியிடங்கள் என்பது பற்றி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயது : 2017 ஆக.1ன் படி 18 - 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீட்டு பிரிவினர்களுக்கு வயது சலுகை உள்ளது.
கல்வித்தகுதி : பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பங்களை www.ssconline.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் முறையில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்கட்டணம் 100 ரூபாய். இதனை நெட் பேங்கிங், டெபிட்கார்டு மூலம் செலுத்த வேண்டும். பெண்கள்/ S.C/ S.T பிரிவினருக்கு கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 15. 07.2017
தேர்வு மையம்:
தமிழகத்தில் சென்னை, மதுரை ஆகியவை தேர்வு மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. ஆன்லைன் எழுத்துத் தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
மேலும் கூடுதல் விபரங்களுக்கு http://ssc.nic.in/SSC_WEBSITE_LATEST/notice/notice_pdf/NoticeStenoC&D2017_17062017.pdf என்ற லிங்கை க்ளிக் செய்யவும்.
Comments
Post a Comment