+2படித்தவர்களுக்கு தேசிய பாதுகாப்புதுறையில் வேலை
பாதுகாப்பு துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தேசிய பாதுகாப்பு அகாடமியில் காலியாக உள்ள 390 இடங்களுக்கான அறிவிப்பை UPSC வெளியிட்டுள்ளது. இதற்கு பாதுகாப்பு துறையில் பணி செய்ய துடிக்கும் இளைஞர்களிடமிருந்து வரும் 30க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 390
1. தரைப்படை - 208
2. கப்பல்படை - 55
3. விமானப்படை - 72
4. நேவல் அகாடமி - 55
வயது வரம்பு: 02.01.1999 மற்றும் 01.01.2002 ஆகிய தேதிகளுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: பிளஸ் 2 முடித்த திருமணமாகாத ஆண்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
உடல்தகுதி: விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 152 செ.மீ. உயரமும், அதற்கேற்ற எடையளவும் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 என்ற அளவிலும், கண்ணாடியுடன் 6/6, 6/6 என்ற அளவிலும் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:www.upsconline.nic.in என்ற இணையதளத்தில் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக்கட்டணம்: பொது மற்றும் OBC பிரிவினருக்கு ரூ.100. மற்ற பிரிவினர்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2017
மேலும் முழுமையான விபரங்கள் அறிய http://upsc.gov.in/sites/default/files/Notice_NDA_NA _II_ Exam_2017_English_ Final.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Comments
Post a Comment