ஐடிஐ,டிப்ளமோ-தகுதிக்கு பாம்பே IIT யில் வேலை

பாம்பே IIT-ல்  கீழ்க்கண்ட  பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் பின்வருமாறு:

Advt. No.: Rect/Admin-II/2017/5

பணியின் பெயர்:Jr.Mechanic

காலியிடங்கள்: 5 (UR -4,SC-1)

கல்வித்தகுதி: Electrical engineering பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ITI முடித்து 5 வருட  பணி  அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுகள் நடைபெறும் நாள்: 11.8.2017

பணியின் பெயர்:Jr.Mechanic

காலியிடம்: 1(UR)

கல்வித்தகுதி:Mechanical engineering பாடப்பிரிவில் டிப்ளமோ முடித்து 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது ITI முடித்து 5 வருட  பணி  அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுகள் நடைபெறும் நாள்: 8.8.2017

மேற்கண்ட 2 பணிகளுக்குமான வயது மற்றும் சம்பளம்:

சம்பளவிகிதம்: 5,200 – 20,200

வயது: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை:

எழுத்துத்தேர்வு மற்றும் ஸ்கில்டு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுகளின் போது ஆன்லைன் விண்ணப்பப்படிவத்துடன் ஒரு புகைப்படம்,அடையாள அட்டை மற்றும் தேவையான சான்றுகள் போன்றவற்ற்றின் அசல்களையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

தேர்வுகள் நடைபெறும் இடம்:

VMCC,

Second Floor(LH#21), IIT Bombay,

Powai, Mumbai – 76

தேர்விற்கு அழைக்கப்படும் SC/ST பிரிவினர்களுக்கு  2-ம் வகுப்பு ரயில்/ சாதாரண பேருந்து கட்டணம் வழங்கப்படும்.

விண்ணப்பக்கட்டணம்:

ரூ.50. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும்.

பெண்கள்/SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் www.iitb.ac.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம், பிறப்பு சான்று, சாதி சான்று, PWD சான்று, கல்வித்தகுதி சான்றுகள், பணி அனுபவ சான்று போன்றவற்றை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரின்ட்அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 28.7.2017

மேலும் கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள www.iitb.ac.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்

 

 

 

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

7th cpc - cabinet aproves(கேபினெட் அமைச்சரவையால் ஏற்று கொள்ளபட்டவை)