விமான நிலைய ஆணையத்தில் இளநிலை உதவியாளர் பணி
பொதுத்துறை நிறுவனமான இந்திய விமான ஆணையத்தின் கொல்கத்தா விமான நிலைய ஆணைய நிறுவனத்தில் காலியாக உள்ள 105 இளநிலை உதவியாளர் (தீயணைப்பு) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 19 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்தம் காலியிடங்கள்: 105
பணி: இளநிலை உதவியாளர்
வயதுவரம்பு: 30.06.2017 தேதியின்படி 18 - 30க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி சம்மந்தப்பட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் சலுகைகள் வழங்கப்படும்.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் பொறியியல் துறையில் மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், தீயணைப்பு போன்ற பிரிவில் 50 சதவீத மதிப்பெண்களுடன் 3 ஆண்டு டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். 50 சதவீத மதிப்பெண்களுடன் +2 தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.400. மற்ற அனைத்து பிரிவினருக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்லது.
விண்ணப்பிக்கும் முறை:www.aai.aero என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் நிலை-1, நிலை-2 என இரு நிலைகளில் விண்ணப்பக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 19.07.2017
மேலும் விண்ணப்பதாரர்களின் சந்தேகங்களுக்கு www.aai.aero என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
Comments
Post a Comment