தமிழக விவசாய துறையில் -உதவி பொறியாளர் பணி

தமிழக அரசின் விவசாயப் பொறியியல் துறையில் கீழ்க்கண்ட  பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் பின்வருமாறு:

Advt. No.: 16/2017

பணியின் பெயர்: Assistant Engineer

காலியிடங்கள்: 21

சம்பளம்: ரூ.9300 - 34800 + GP 5100

கல்வித்தகுதி: Agricultural Engineering,  Mechanical, Civil, Automobile, Production, Industrial Engineering போன்ற துறைகளில் B.E அல்லது Agricultural Engineering/Automobile Engineering பாடப்பிரிவில் B.Tech  பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது B.Sc Agricultural Engineering பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பு கிடையாது.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை

விண்ணப்பக்கட்டணம்: ரூ.150. இதனை ஆன்லைன் மூலம் செலுத்தலாம்.

விண்ணப்பிக்கும் முறை:www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்பித்தவுடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ள வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.08.2017

எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 07.10.2017

மேலும் முழுமையான விவரங்கள் அறிய  http://www.tnpsc.gov.in/notifications/2017_16_asst_engr_agri_backlog.pdf  என்ற லிங்கை கிளிக் செய்து தேர்ந்துகொள்ளவும்.

 

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

7th cpc - cabinet aproves(கேபினெட் அமைச்சரவையால் ஏற்று கொள்ளபட்டவை)