வங்கிகளில்-15332 பணியிடம்

இந்திய இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுத் தரும் துறையாக வங்கித்துறை மாறியுள்ளது இதற்கு வங்கிகள் தகவல்தொழில்நுட்ப வளர்ச்சியை சரியாக பயன்படுத்தி, வங்கிப் பயன்பாட்டை அதிகரித்தும் எளிதானதாக மாற்றம் செய்து வருவதே காரணம் என கூறலாம்.

வங்கிகள் துறைகளில் இருந்து வெளிவரும் அறிவிப்புகள் இன்றைய இளைஞர்களுக்கான அரிய வாய்ப்பாக அமைந்துள்ளது.

21 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளுக்கு, ஊழியர்களை தேர்வு செய்யும் பணியை 'ஐ.பி.பி.எஸ்.,' (Institute of Banking Personnel Selection ) தேர்வாணையம் ஏற்றுள்ளது.

தற்போது ஆறாவது முறையாக 2017 - 18ஆம் ஆண்டுக்கான 15,332 குரூப் "ஏ" அதிகாரி மற்றும் குரூப் "பி" அலுவலக உதிவியாளர்கள் பணியிடங்களுக்கான தேர்வுக்கான அறிவிப்பை ஐ.பி.பி.எஸ் வெளியிட்டுள்ளது.

 

காலியிடங்கள்: இந்தியாவில் உள்ள 56 கிராம வங்கிகளில் காலியாக உள்ள 15332 ஆயிரம் காலியிடங்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பல்லவன் கிராம வங்கி, பாண்டியன் கிராம வங்கி என இரண்டு வங்கிகள் உள்ளன. இதன் மூலம் சுமார் 590 இடங்கள் உள்ளன.

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலையில் ஏதாவது ஒரு பட்டப்படிப்பு முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகுதியாக பள்ளி, கல்லூரிகளில் 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும். அல்லது டிப்ளமோ அல்லது சான்றிதழ் படிப்பு முடித்திருக்க வேண்டும்.

சம்பள விவரம்:
Office Assistant (Multipurpose) பணிக்கு தோராயமாக மாதம் ரூ.19000-22000
Officer Scale - I பணிக்கு தோராயமாக மாதம் ரூ.30000-36000
Officer Scale - II பணிக்கு தோராயமாக மாதம் ரூ.36000-42000
Officer Scale - III பணிக்கு தோராயமாக மாதம் ரூ.41000-47000

விண்ணப்பிக்கும் முறை:இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க, www.ibps.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கட்டணம்: 600 ரூபாய் (எஸ்சி,எஸ்டி பிரிவினருக்கு 100 ரூபாய்). இதனை ஆன்லைன், வங்கி சலான் ஆகிய 2 வழிகளில் செலுத்தலாம். ஜூலை 12 முதல் ஆக., 1 வரை விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை:அதிகாரி பதவிக்கு ஆன்லைன் முறையிலான முதல்நிலை தேர்வு (பிரிலிமினரி) மற்றும் முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) என இரு கட்ட எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பிரிலிமினரி தேர்வு அடிப்படையில் தேர்ச்சி பெறுவோர் மெயின் தேர்வுக்கு தேர்வு செய்யப்படுவர்.

மெயின் தேர்வில் கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில் அதிக மதிப்பெண் பெற்றவர்கள், இட ஒதுக்கீடு, வங்கியில் உள்ள காலிப்பணியிடங்கள், அரசு விதிகள் அடிப்படையில் இறுதியாக தேர்வு செய்யப்படுவர்.

அதிகாரி பதவிக்கு எழுத்துத்தேர்வு 2017 செப்டம்பர் 9, 10 மற்றும் 16 ஆம் தேதி நடைபெறும். உதவியாளர் பதவிக்கு எழுத்துத்தேர்வு 2017 செப்டம்பர் 17, 23, 24 ஆம் தேதிகளில் நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 14.08.2017 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தாரர்கள் தங்களின் ஆன்லைன் விண்ணப்ப பதிவில் தவறுதலாக தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்களை இன்று முதல் 24.07.2017 முதல் 14.08.2017 வரை திருத்தம் செய்துகொள்ளலாம்.

மேலும் வயதுவரம்பு, தகுதிகள் குறித்த முழுமையான விவரங்கள் அறிய http://www.ibps.in/wp-content/uploads/Detail_Advt_CRP_RRB_VI_final.pdfஎன்ற இணையதள லிங்கை கிளிக் செய்து படித்து தெரி்ந்து விண்ணப்பிக்கலாம்.

 

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

7th cpc - cabinet aproves(கேபினெட் அமைச்சரவையால் ஏற்று கொள்ளபட்டவை)