புதுச்சேரியில் ஸ்டாப் நர்சு பணி
புதுச்சேரியிலுள்ள “இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில்” கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் பின்வருமாறு:
பணியின் பெயர்: Staff Nurse
காலியிடங்கள்: 100
சம்பளவிகிதம்: 20,000
வயது: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: நர்சிங் பாடப்பிரிவில் இளநிலை பட்டம் அல்லது General Nursing டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
எழுத்துத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்வு நடைபெறும் இடம்: IGMC&RI, புதுச்சேரி
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.igmcri.com என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப்படிவத்தை டவுன்லோடு செய்து பூர்த்தி செய்து அதனுடன் அட்டெஸ்ட் செய்த தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து பதிவு தபால் மூலம் 10.7.2017-க்கு முன்பாக அனுப்ப வேண்டும்.
மேலும் விபரங்களை அறிந்து கொள்ள www.igmcri.com என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Comments
Post a Comment