சென்னை உயர்நீதி மன்றத்தில்-127 பணியிடங்கள்
சென்னை உயர்நீதிமன்றத்தில் 2017 2018 ஆம் ஆண்டிற்கான 127 Sanitary Worker, Sweeper பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து வரும் 20க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 127
பணியிடம்: சென்னை:
பணி- காலியிடங்கள் விவரம்:
பணி: Sweeper - 68
பணி: Sanitary Worker - 59
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் தமிழில் எழுத, பேச தெரிந்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 - 35க்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000 + தர ஊதியம் ரூ.1,300
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, செய்முறை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை சென்னையில் மாற்றத்தக்க வகையில் Registrar General, High Court of Madras என்ற பெயருக்கு டி.டி,யாக எடுத்து செலுத்த வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
The Registrar General, High Court, Madras 600 104
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 20.07.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 2017 ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நடைபெறலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.hcmadras.tn.nic.in/Recruitmhc2017.pdf என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
Comments
Post a Comment