விளையாட்டு வீரர்களுக்கு -விமானப்படையில் வேலை

சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்திய விமானப்படையில் சிறப்பு பணி நியமனமாக குரூப் 'ஒய்' பிரிவிலான காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியான விளையாட்டு வீரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: குரூப் 'ஒய்' பிரிவிலான பணி

விளையாட்டு பிரிவு தகுதி: அதாலடிக்ஸ், பேஸ்கட் பால், குத்துசண்டை, கிரிக்கெட், சைக்ளிங், கால்பந்து, ஜிம்னாஸ்டிக்ஸ், ஹாக்கி, கபாடி, லான் டென்னிஸ், துப்பாக்கி சுடுதல், நீச்சல், கைப்பந்து , மல்யுத்தம், பளுதுாக்குதல், கோல்ப் போன்ற விளையாட்டுகளில் சிறப்புத் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28.12.1996 - 27.12.2000க்குள் பிறந்திருக்க வேண்டும்.

தகுதி: பிளஸ் 2 முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடல் தகுதி தேர்வு மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Secretary, Air Force Sports Control Board,
C/O Air Force Station New Delhi,
Race Course, New Delhi-110003

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.08.2017

மேலும் விண்ணப்பிக்கும் முறை, சலுகைகள் போன்ற முழுமையான விபரங்கள் அறியwww.indianairforce.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

Sexual harassment பெண் ஊழியருக்கு

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்