வங்கித்தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பு
வங்கித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் ஏழை மற்றும் தலித் மாணவர்களுக்கான இலவசப் பயிற்சி முகாம், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9) தொடங்குகிறது.
இதுகுறித்து இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு பிரிவின் தலைவர் தி.தமிழரசு, பொதுச் செயலர் சி.பி.கிருஷ்ணன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: வங்கித் துறையில் ஆண்டுதோறும் அகில இந்திய அளவில் சுமார் 40,000 பணியாளர்கள் நியமிக்கப்படுகின்றனர்.
அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும்... இந்தப் பணியிடங்களுக்கான தேர்வுகளில் வெற்றி பெறுவதற்காக தலித்துகள், ஏழை மாணவர்களுக்கு கட்டணமில்லா பயிற்சி வகுப்பை இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு பிரிவு, தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு பயிற்சி மையம் ஆகியவை இணைந்து நடத்தி வருகின்றன.
இந்த ஆண்டுக்கான வகுப்புகள் வரும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 9) முதல் ஒவ்வொரு வாரமும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடைபெறும்.
வெள்ளாள தேனாம்பேட்டை, 27, வி.வி.கோயில் தெரு, சென்னை 86 என்ற முகவரியில் செயல்பட்டு வரும் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனக் கட்டடத்தில் ஜூலை 9 - ஆம் தேதி காலை 9 மணிக்கு பயிற்சி வகுப்புகள் தொடங்கப்படும்.
விரும்பமுள்ள மாணவர்கள் தங்களது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். அவர்களின் தகுதிக்கு ஏற்றவாறு பயிற்சிகள் வழங்கப்படும். 98944 96760, 98407 61603, 94444 82260 ஆகிய எண்களில் கூடுதல் தகவல்களை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment