தமிழக ஊரகவளர்ச்சி துறை வேலை

சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தில் நிரப்பப்பட உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியின் பெயர்: Office Assistant

காலியிடங்கள்: 14

சம்பளம்: மாதம் ரூ.4,800 - 10,000

வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

அலுவலக உதவியாளர் பணியிடத்திற்கான மாதிரி விண்ணப்பப் படிவம்:

புகைப்படம்

1. பெயர்:
2. ஆண்/பெண்:
3. தந்தை/கணவர்/ பாதுகாவலர் பெயர்:
4. பிறந்த தேதி/வயது:
5. கல்வித்தகுதி:
6. முகவரி:
7. தொலைபேசி மற்றும் கைப்பேசி எண்:
8. மதம்
9. வகுப்பு/இனம்/உட்பிரிவு: ஆதி/பழங்குடியினர்/பிவ/மிபவ/பொது/
10 ஆதரவற்ற விதவை: ஆம்/இல்லை
------------------------------------------------------------------------------------------------
விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்கள் அனைத்தும் என் அறிவுக்கு எட்டியவரை உண்மை. தேர்விற்கு முன்போ அல்லது பிறகோ இவ்விவரங்கள் தவறு என அறியவரும் பட்சத்தில் என்மீது தேர்வுக்குழு எடுக்கும் எவ்வித நடவடிக்கைக்கும் உட்படுகிறேன். மேலும் போட்டித் தேர்வுக்கு தேவையான அனைத்து தகுதிகளையும் பெற்றுள்ளேன் என உறுதி கூறுகிறேன்.

கையொப்பம்

-------------------------------------------

இணைப்பு:
1. பிறப்புச்சான்றுநகல்
2 சாதிச் சான்று நகல்
3. கல்வித் தகுதிச் சான்று நகல்

மேற்கண்ட விவரங்களுடன் ஏ4 வெள்ளைத்தாளில் விண்ணப்பம் தயார் செய்து பூர்த்தி செய்து அதனுடன் பிறப்பு, சாதி, தகுதி சான்று நகல்கள் இணைத்து அஞ்சல் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
இயக்குநர்,
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்கம்,
4வது தளம், பனகல் மாளிகை,
சைதாப்பேட்டை, சென்னை-15

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.07.2017

 

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

7th cpc - cabinet aproves(கேபினெட் அமைச்சரவையால் ஏற்று கொள்ளபட்டவை)