வங்கித்துறையில் 3247 பணியிடங்கள்

பட்டதாரி இளைஞர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பாக பொதுத்துறை வங்கிகளான 20 வங்கிகளில் புராபேஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெய்னி பணிகளுக்கான பொது எழுத்து தேர்வை IBPS அமைப்பு அறிவித்துள்ளது. மொத்தம் 3247 பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. இதுகுறித்த விரிவான விவரம் வருமாறு

வங்கிப் பணிகளுக்கான தேர்வை நடத்தும் அமைப்பாக விளங்கும் “The Institute of Banking Personnel Selection (IBPS)” தற்போது 20 பொதுத்துறை வங்கிகளில் 2017 - 2018 ஆம் ஆண்டிற்கான புராபேஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெய்னி பணிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் 20 வங்கிகளில் புராபேஷனரி அதிகாரி, மேலாண்மை டிரெய்னி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

மொத்த காலியிடங்கள்: 3247

பணியிடம்: இந்தியா முழுவதும்.
வயது வரம்பு: 01.07.2017 தேதியின்படி 20 முதல் 30க்குள் இருக்க வேண்டும். அதாவது 20.07.1987 - 01.07.1997க்குள் (இரு தேதிகள் உள்பட) பிறந்திருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு சலுகையும் அனுமதிக்கப்படுகிறது.

கல்வித்தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,700 - 42,020

தேர்வு செய்யப்படும் முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ஊனமுற்றோர், மற்றும் முன்னாள் படைவீரர்கள் ரூ.100-ம், மற்றவர்கள் ரூ.600 ஆம் விண்ணப்பக் கட்டணமாக செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் இணையதளம் வழியாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப பதிவு 06.08.2017 அன்று தொடங்குகிறது.

ஆன்லைன் விண்ணப்பம் சமர்ப்பிக்க கடைசி தேதி: 26.08.2017.

மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://drive.google.com/file/d/0BzDh435CQG8xbDhFSlA1XzdaZjQ/view என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

7th cpc - cabinet aproves(கேபினெட் அமைச்சரவையால் ஏற்று கொள்ளபட்டவை)