தேசிய பஞ்சாயத்ராஜ்-கிளார்க் வேலை
ஹைதராபாத்தில் உள்ள “National Institute of Rural development and Panchayat Raj”-ல் கீழ்க்கண்ட 21 பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Advt.No.11/2017 (Admn.A/A5/2016/89)
பணியின் பெயர்: Upper Division Clerk
காலியிடங்கள்: 4 (UR-3,ST-1)
சம்பளவிகிதம்: 5200-20,200
வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் இளநிலை பட்டப்படிப்புடன் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்று 5 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: LDC/Typist
காலியிடங்கள்: 17 (UR-10,OBC-4,SC-2,ST-1)
சம்பளவிகிதம்: 5,200-20200
வயதுவரம்பு: 18 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: +2 தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தொழிற்திறன் தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.nird.org.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 15/07/2017
Comments
Post a Comment