AIIMS-ல் 475 ஸ்டாப் நர்சு பணி
ராய்ப்பூரில் உள்ள “AIIMS” மருத்துவமனையில் கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் பின்வருமாறு:
Advt. No.: Admin/Rec./Regular/SN-II/2017/AIIMS.RPR
பணியின் பெயர்: Staff Nurse Grade-I (Nursing Sisters)
காலியிடங்கள்: 75 (UR-39,OBC-20,SC-11,ST-5)
சம்பளவிகிதம்: 9,300-34,800
வயது: 21 முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: நர்சிங் பாடப்பிரிவில் 2/4 வருட B.Sc பட்டம் பெற்று நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: Staff Nurse Grade-II (Sister Grade-II)
காலியிடங்கள்: 400 (UR-205,OBC-106,SC-60,ST-29)
சம்பளவிகிதம்: 9,300-34,800
வயது: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
கல்வித்தகுதி: நர்சிங் பாடப்பிரிவில் 2/4 வருட B.Sc பட்டம் பெற்று நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு சலுகை: 31.7.2017 தேதிப்படி கணக்கிடப்படும். OBC/SC/ST/PWD பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் தொழிற்திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
பாடத்திட்ட விபரங்களுக்கு www.aiimsraipur.edu.in எனற இணையதள முகவரியை பார்க்கவும்.
எழுத்துத்தேர்விற்கான அட்மிட் கார்டை இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்து கொள்ளவும்.
விண்ணப்பக்கட்டணம்:
பொது/OBC/Ex-SM பிரிவினர்களுக்கு ரூ. 1000. இதனை ஆன்லைன் முறையில் செலுத்த வேண்டும். SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.aiimsraipur.edu.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம் மற்றும் கையொப்பத்தை ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.7.2017
மேலும் கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள www.aiimsraipur.edu.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Comments
Post a Comment