விசாகப்பட்டிணம் ஸ்டீல் ஆலையில் வேலை
விசாகப்பட்டினத்திலுள்ள “ஸ்டீல் ஆலையில்” கீழ்க்கண்ட பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால் தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்த விபரங்கள் பின்வருமாறு:
Advt. No.: 04/2017
பணியின் பெயர்: Junior Trainee
காலியிடங்கள்: 19 (UR-10,OBC-5,SC-3,ST-1)
வயது: 1.7.2017 தேதிப்படி 18 முதல் 27 வயதிற்குள் இருக்க வேண்டும். OBC/SC/ST/PWD/EX-SM பிரிவினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.
கல்வித்தகுதி: 10-ம் வகுப்பு தேர்ச்சியுடன் Instrument Mechanic/Electronics/Electronics & Instrumentation/Electronics (Mechanical) பாடப்பிரிவில் டிப்ளமோ/ITI தேர்ச்சியுடன் NCVT சான்று பெற்றிருக்க வேண்டும்.
தேர்ந்தெடுக்கப்படும் முறை:
தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு, மருத்துவத்தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தேர்வு செய்யப்படுவர்.
எழுத்துத்தேர்விற்கான Admit Card-ஐ இணையதளத்திலிருந்து டவுன்லோடு செய்ய வேண்டிய நாள்: 14.8.2017
எழுத்துத்தேர்வு நடைபெறும் நாள்: 20.8.2017
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் மருத்துவத்தேர்வு நடைபெறும் நாள் : 10.9.2017
தேர்வுகளில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு 2 வருட பயிற்சி வழங்கப்படும்.
பயிற்சியின் போது உதவித்தொகை:
முதல்வருடம் : 10,700
இரண்டாம் வருடம்: 12,200
விண்ணப்பக்கட்டணம்:
ரூ300. இதனை இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள செலானை பிரின்ட் அவுட் செய்து அருகிலுள்ள SBI வங்கியில் செலுத்த வேண்டும். SC/ST/PWD பிரிவினர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியானவர்கள் www.vizagsteel.comஎன்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் போது புகைப்படம், கையொப்பம் மற்றும் விண்ணப்ப கட்டண ரசீது ஆகியவற்றை ஸ்கேன் செய்து அப்லோடு செய்ய வேண்டும், விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் செய்து கைவசம் வைத்து கொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 31.7.2017
மேலும் கூடுதல் விபரங்களை அறிந்து கொள்ள www.vizagsteel.comஎன்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Comments
Post a Comment