ராணுவ தளவாட தொழிற்சாலையி்ல்-3880 ஐடிஐ பணி
இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் நாட்டின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் இந்திய பாதுகாப்புப் படைகளின் உபயோகத்திற்கான தளவாடங்களை உற்பத்தி செய்து தரும் ராணுவ தளவாடங்கள் தொழிற்சாலைகளில் (Indian Ordnance Factory (IOF) (OFB)) காலியாக உள்ள 3,880 குரூப் 'சி' பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 3880
பணி: குரூப் 'சி'
வயது வரம்பு: 19.06.2017 தேதியின்படி 18 - 32க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் என்டிசி மற்றும் என்ஏசி பிரிவுகளில் என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,800
தேர்வு செய்யப்படும் முறை: கணினி எழுத்துத் தேர்வு, டிரேடு தேர்வு மற்றும் செய்முறை, சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்வு மையம்: சென்னை உள்ளிட்ட நாட்டின் முக்கிய மையங்களில் இந்தத் தேர்வு நடத்தப்படுகிறது.
விண்ணப்பிக்கும் முறை: www.ofb.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.50
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 10.07.2017
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: ஜூலை இறுதி வாரத்தில் அல்லது ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறலாம்.
மேலும் கூடுதல் விவரங்கள் அறிய http://images.dinamani.com/uploads/user/resources/pdf/2017/7/5/OFRC-Advertisement.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரி்ந்துகொள்ளவும்.
Comments
Post a Comment