UPSC-Group B-Gazatted officer
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமான UPSC தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள “இந்திய தகவல் சேவை” பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது குரூப் – பி பிரிவில் வரும் கெஜட்டட் அரசு அதிகாரி பணியிடங்களாகும்.
இந்தி, மராத்தி, ஆங்கிலம், குஜராத்தி, பெங்காலி, ஒரியா, தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், உருது, அஸ்ஸாமி, பஞ்சாபி, காஷ்மீரி, மணிப்புரி போன்ற 15 மொழிகளில் மொத்தம் 72 பணியிடங்கள் உள்ளன.
வயது வரம்பு: இந்த பணிகளுக்கு 30 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். அரசு விதிகளின் படி வயது வரம்பு தளர்வு அனுமதிக்கப்படுகிறது.
கல்வித்தகுதி: பணியிடங்கள் உள்ள பாடப்பிரிவில் பட்டப்படிப்பு படித்திருப்பதுடன், முதுநிலை இதழியல் மற்றும் மாஸ் கம்யூனிகேஷன் போன்ற முதுநிலை டிப்ளமோ படிப்பு அல்லது பட்டமேற்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். விருப்பம் உள்ளவர்கள் ரூ.25 செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 29.06.2017
விண்ணப்பிக்கவும் விரிவான தகவல்களை தெரிந்து கொள்ளவும் www.upsconline.nic.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும்.
Comments
Post a Comment