Training at job -indian army இராணுவத்தில் வேலை
இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணிக்கு தகுதியும் விருப்புமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள் : 390.
பணி : பயிற்சியுடன் கூடிய அதிகாரி பணி (இந்தியக் கடற்படை, விமானப்படை, நேவல் அகாடமி).
வயது வரம்பு : 02.01.1999 மற்றும் 01.01.2002 தேதிகளின் இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
தகுதி :
+2 படிப்பில் இயற்பியல், கணிதம் பாடங்கள் கொண்ட பிரிவை படித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதி வாய்ந்த நபர்கள் ஆவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் இணையதளம் மூலமாக 30.06.2017க்குள் விண்ணப்பிக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் தவிர்த்து மற்ற அனைவரும் ரூ.100 கட்டணமாக செலுத்த வேண்டும்.
தேர்வு செய்யும் முறை:
எழுத்துத் தேர்வு, உளவியல் திறன் தேர்வு, நுண்ணறிவுத் திறன் தேர்வு, ஆளுமைத்திறன் தேர்வு மற்றும் எஸ்.எஸ்.பி நேர்காணல் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
உயரம் – எடை – பார்வைத்திறன் தகுதிகள் :
விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 152 செ.மீ .உயரமும் அதற்கான எடையும் இருக்க வேண்டும். பார்வைத்திறன் கண்ணாடியின்றி 6/6, 6/9 கண்ணாடியுடன் 6/6, 6/6 இருக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு :
அதிகாரப்பூர்வ விளம்பர இணையசுட்டி :http://www.joinindianarmy.nic.in
ராணுவ அகாடமியின் இணையதளம் : http://www.joinindianarmy.nic.in
Comments
Post a Comment