Indian coast guard-கடலோர காவல் படை வேலை
இந்தியாவின் கடலோர எல்லைகளில் ஊடுருவலைத் தடுக்கும் நோக்கத்தில் நிறுவப்பட்டதுதான் கடலோரக் காவல் படை (Indian Coast Guard).
பாதுகாப்புப் படைகளில் தனி இடத்தைக் கொண்டுள்ள இப்படை, நீர்வழி மற்றும் ஆகாய வழி என்ற இரண்டு வகையிலும் நமது சர்வதேச நீர் எல்லைகளைக் காப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது.
இந்தப் படையில் உதவி கமாண்டன்ட் பதவிக்கு தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: ஜெனரல் டியூட்டி, ஜெனரல் டியூட்டி (பைலட்)
கல்வித்தகுதி: பி.இ./பி.டெக் படிப்பில் 60 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: பைலட்(சி.பி.எல்)
கல்வித்தகுதி: பிளஸ் 2 படிப்பில் 60 சதவீத மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் சி.பி.எல் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியானவர்கள் www. joinindiancoastguard.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்ச்சி முறை: எழுத்துத் தேர்வு, உடல்தகுதி தேர்வு, நேர்காணல் அடிப்படையில் தேர்ச்சி இருக்கும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள்: : 02/07/2017
மேலும் விபரங்களை அறிந்து கொள்ள www. joinindiancoastguard.gov.in என்ற இணையதள முகவரியை பார்க்கவும்.
Comments
Post a Comment