JOIN ARMY at Thanjavur தமிழ்நாடு

தஞ்சாவூரில் ஆகஸ்ட் 2 முதல் 10 ஆம் தேதி வரை ராணுவத்துக்கு ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திருச்சி கண்டோன்மென்ட் பகுதியிலுள்ள ராணுவ ஆள்சேர்ப்பு அலுவலகம் சார்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பு:

ராணுவத்தில் ராணுவத் தொழில்நுட்ப வீரர், தொழில்நுட்பப் பிரிவு ( ஏவிஎன், ஏஎம்என் எக்ஸாமினர்), செவிலிய உதவியாளர், பொதுப் பிரிவு, கிளார்க், சரக்கறைக் காவலர் (தொழில்நுட்பம்), டிரேட்ஸ்மேன் ஆகிய பிரிவுகளில் ஆள்களைத் தேர்வு செய்வதற்கான ஆள்சேர்ப்பு முகாம் நடத்தப்பட்ட உள்ளது.

தஞ்சாவூர் அன்னை சத்யா மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஆகஸ்ட் 2 முதல் 10 ஆம் தேதி வரை இந்த முகாம் நடைபெறும். முகாமில் அரியலூர், கன்னியாகுமரி, கரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், ராமநாதபுரம், சிவகங்கை, திருச்சி, தஞ்சாவூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, திருவாரூர், விருதுநகர் ஆகிய 14 மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் காரைக்கால் மாவட்டத்தினரும் பங்கேற்கலாம்.

இந்த முகாமில் பங்கேற்க உரிய தகுதி உடையவர்கள் http://www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் ஜூன் 18 முதல் ஜூலை 17 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஜூலை 17 ஆம் தேதிக்குப் பிறகு விண்ணப்பிக்க இயலாது என தெரிவிக்கப்பட்டுள்ளது

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

சிவகங்கை மாவட்ட இ கோர்ட்டில் வேலை வாய்ப்பு