பேருந்து பயணம்

ஒரு பேருந்தில் ஏற முயலும் போது அல்லது இறங்க முயலும் போது, ஒரு பயணி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டால், அந்த விபத்து பேருந்து ஓட்டுநரின் கவனக்குறைவினால் தான் ஏற்பட்டது என்று கூறமுடியுமா?

சென்னை உயர்நீதிமன்றம் "சேகர் Vs சார்பு ஆய்வாளர், எத்தாப்பூர், சேலம் மாவட்டம் (2001-2-MWN-CRL-249),(2001-1-MLJ-CRL-852)" என்ற வழக்கில், ஒரு வாகனத்தை அதிவேகமாக ஓட்டியது மட்டுமே இ. த. ச பிரிவு 304(A) ன் கீழான குற்றத்தினை நிரூபிப்பதற்கு போதுமானதல்ல என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல் "சுடலைமுத்து Vs மாநில அரசு (1997-CRL.L. J - 1038)" என்ற வழக்கில், உடனடியாக திடீரென ஒரு பேருந்து நிறுத்தப்பட்டது என்பதற்கு தெளிவான சாட்சியம் உள்ள நிலையில், அவ்வாறு நிறுத்தப்பட்ட அந்த பேருந்து அதிவேகமான முறையில் கிளம்பியிருக்க முடியாது என்பதை தெளிவுபடுத்துகிறது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

அதேபோல் உச்சநீதிமன்றம் "ஐனு தீனா என்கிற நியாம் Vs ஆந்திர மாநில அரசு (2001-2-MWN-CRL-SC-77),(AIR-2000-SC-2511),(2001-1-MLJ-CRL-58)" என்ற வழக்கில், ஒரு பேருந்தில் ஏற முயலும் போது ஒரு பயணி கீழே விழுந்து விட்டார் என்பதற்காக, அந்த பேருந்தின் ஓட்டுநர் கவனக்குறைவாக செயல்பட்டார் என்று அனுமானிக்க கூடாது என்று தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே ஒரு பேருந்தில் ஏற முயலும் போது அல்லது இறங்க முயலும் போது, ஒரு பயணி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டால், அந்த விபத்துக்கு பேருந்தின் ஓட்டுநரே காரணம் என்று கருத முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. RC. NO - 994/2008, DT - 21.4.2015

Thirumoorthi Vs Inspector of police, North Police Station, Thiruppur

(2015-2-MLJ-CRL-696)

Comments

Popular posts from this blog

சங்கங்களை எவ்வாறு பதிவு செய்ய வேண்டும்

தமிழக அரசு போக்குவரத்து -தொமுச பொ.செ ஐயா மு.சண்முகம் அவர்கள்

சிவகங்கை மாவட்ட இ கோர்ட்டில் வேலை வாய்ப்பு