CAG-Job for sportsman ,CAGயில் வேலை
நமது தேசத்தின் நிதித் தேவைக்கான ஆதாரமாக திகழும் சி.ஏ.ஜி., அமைப்பு இந்தியாவின் ஆடிட் அண்டு அக்கவுண்ட்ஸ் டிபார்ட்மென்ட்களின் தலைமைச் செயலகம் என்று சொல்லலாம்.
ஆபிஸ் ஆப் தி கம்ப்ட்ரோலர் அண்டு ஆடிட்டர் ஜெனரல் ஆப் இந்தியா என்பது CAG என்ற சுருக்கமான பெயராலேயே அனைவராலும் அறியப்படுகிறது.
பெருமைக்குரிய இந்த அலுவலகத்தின் சார்பாக விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு பணி நியமனமாக 171 ஆடிட்டர்/அக்கவண்டன்ட்/கிளார்க்குகளைப் பணி நியமனம் செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வயது : விண்ணப்பதாரர்கள் 18 முதல் 27 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : ஆடிட்டர் மற்றும் அக்கவுண்டன்ட் பதவிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.
கிளார்க் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் பிளஸ் 2 படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விளையாட்டுத் தகுதி : ஆண்களுக்கான கிரிக்கெட், ஆண்களுக்கான கால்பந்து , ஆண்களுக்கான ஹாக்கி, இருபாலருக்கான பாட் மின்டன் மற்றும் டேபிள் டென்னிஸ் ஆகிய விளையாட்டுகளில் சிறப்புத் தகுதி கொண்டவர்களுக்கான சிறப்பு பணி நியமனமாகும் இது.
தேர்ச்சி முறை : டைப்பிங், அக்கவுண்ட்ஸ் பிரிவில் தகுதித் தேர்வு, நேர்காணல் போன்ற முறைகளில் தேர்ச்சி இருக்கும்.
விண்ணப்பிக்க : மேற்கண்ட பதவிகளுக்கு தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான விண்ணப்பத்தை முழுமையாக நிரப்பி, உரிய
ஆவணங்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி நாள் : 03/07/2017
மேலும் கூடுதல் விபரங்களுக்கு : www.davp.nic.in/WriteReadData/ADS/eng_51101_1_1718b.pdf
Comments
Post a Comment