1945ல் டாடா இன்ஸ்டிடியூட் ஆப் பண்டமென்டல் ரிசர்ச் நிறுவனத்தின் மூலம் டாக்டர் ஹோமி ஜஹாங்கீர் பாபா என்பவரால் நிறுவப்பட்டதுதான் தற்சமயம் பாபா அட்டாமிக் ரிசர்ச் சென்டர் எனப்படும் BARC நிறுவனம் ஆகும். நமது நாடு விடுதலை அடைந்தபின் அரசுத்துறைக்கு மாற்றப்பட்ட இந்த அணுசக்தி நிறுவனம் மிகவும் பெயர் பெற்றது. இந்த அணுசக்தி மையத்தில் தற்சமயம் காலியாக இருக்கும் டெக்னீசியன் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வயது : விண்ணப்பதாரர்கள் 50 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். கல்வித் தகுதி : பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை குறைந்தபட்சம் 60 சதவீத மதிப்பெண்களோடு முடித்திருப்பதோடு, ஒரு வருட கால டிரேடு படிப்பை முடித்திருக்க வேண்டும். விண்ணப்பிக்கும் முறை : பரிந்துரைக்கப்பட்ட மாதிரியிலான படிவத்தை முழுமையாக நிரப்பி, உரிய ஆவணங்களின் நகல்களை இணைத்து பின்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி: Head, Rational Medicine Centre, Room No: 415, Tata Hospital Annexe Building, Jerbai Waida Road, Parel, Mumbai 400 012. விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி ...